Sunday 31 October 2021

பள்ளிகளில் செய்யக் கூடாதவை

 01.11.2021 அன்று பள்ளிகள் திறந்த பிறகு, பள்ளிகளில் செய்யக் கூடாதவை (SoP)


01. காலை வழிபாட்டுக் கூட்டம் (Morning Assembly) நடத்த அனுமதியில்லை. 


02. Bio Metric Attendance பயன்படுத்த அனுமதியில்லை. 


03. விளையாட்டு நிகழ்வுகள் (Play Activities) எதுவும் நடைபெற அனுமதியில்லை. 


04. கலை நிகழ்ச்சிகள் (Cultural Activities) நடத்த அனுமதியில்லை. 


05. NCC, NSS செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. 


06. மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து Snacks / Lunch சாப்பிட அனுமதியில்லை. 


07. Group Activities க்கு அனுமதியில்லை. 


08. மாணவர்களை ஈடுபடுத்தி சுத்தம் செய்ய அனுமதியில்லை. 


09. வெளியில் வந்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு (Vendors) அனுமதியில்லை. 


10. உணவு பொருட்களை Sharing செய்ய அனுமதியில்லை. 


11. ஒரு மாணவருக்கு Corona அறிகுறி தென்பட்டால், பள்ளிக்கு விடுமுறை விட அனுமதியில்லை. 


12. காலை, மாலை இடைவேளைகளின்போது மாணவ, மாணவிகள் கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை.

🙏

Thursday 28 October 2021

பள்ளித்திறப்பு இனிமையாக அமைய

அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:

அரசு வெளியிட்டுள்ள  SOP ன் படி பள்ளிகளில் ஆயத்தப் பணிகளை செய்யவேண்டும்.


(01) பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பிடங்கள், மைதானம் ஆகியவை சுத்தப்படுத்துதல் வேண்டும்.


(02) குடிநீர் தொட்டி,  மேல்நிலைத் தொட்டி சுத்தப்படுத்த வேண்டும். 


(03) சுத்தமான குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


(04) உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர்,  சானிடைசர், சோப்பு போன்றவை இருக்க வேண்டும்.


(05) முக கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக போதுமான முக கவசம் இருப்பு இருக்க வேண்டும்.


(06) பெற்றோர்களிடம் விருப்ப கடிதம் பெறப்படவேண்டும். விருப்ப கடிதம் பெறப்படும் பொழுது மாணவர்களே முக கவசம் அணிவித்து அனுப்பும்படி கூறவேண்டும்.


(07) பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடித்திருக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி உதவிகளை கேட்டுக்கொள்ளலாம்.


(08) ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும்  குறிப்பதற்கான பதிவேடு போடப்பட்டிருக்க வேண்டும்.  


(09) வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக கால அட்டவணை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். 


(10) குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பிரிண்ட் எடுத்து ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும்.


(11) காலையில் மாணவர்கள் வரும்பொழுதும், இடைவேளையின் போதும், மதிய உணவு வேளையின் போதும், மாலையில் மாணவர்கள் செல்லும் போதும் கவனிக்க வேண்டிய ஆசிரியர்கள் பெயர் விவரங்களை கிழமை வாரியாக பதிவேட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

 

(12) இருபதுக்கு இருபது 400 சதுர அடி கொண்ட ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இது கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மேலும் அளவு குறைவாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் மாணவர்களை அமர வைக்க வேண்டும்.


(13) மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது சுழற்சி முறையில் மாணவர்கள் வருகையை முன்கூட்டியே உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் 1ம் தேதி அன்று வருகின்ற மாணவர்களை முன்கூட்டியே பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். எந்தவித காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் முதல் தேதியன்று பள்ளிக்கு வந்து விட்டு திரும்ப செல்லக்கூடாது. யார் வரவேண்டும் என்பதை முதலாவது உறுதிசெய்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


(14) SOP செயல்முறைகள் நகல் அனைத்து ஆசிரியர்களும் வைத்திருக்க வேண்டும். 


(15) மாணவர்கள் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.


(16) பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள் வரும்பொழுது  வரிசையில் இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக வட்டம் போட வேண்டும். அதேபோன்று கைகழுவும் இடத்திலும் கழிப்பிடம் செல்லும் இடத்திலும் வகுப்பறைக்குள் நுழையும் பொழுதும் இடைவெளிவிட்டு மாணவர்கள் நிற்பதற்கு வசதியாக வட்டம் போட வேண்டும். முதலிரண்டு வகுப்புகளில் தேவைப்பட்டால் மாணவர்கள இடைவெளிவிட்டு அமர்வதற்கு வசதியாக வட்டம் போட்டுக் கொள்ளலாம். 


(17) மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து வரச் சொல்ல வேண்டும். 


(18) விலையில்லா பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

 

(19) வகுப்பிற்கு ள்ளும் வகுப்பிற்கு வெளியையும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையிலே வாசகங்கள், பதாகைகள் ஒட்டப்பட்டி இருக்க வேண்டும். 


(20) மாணவர்கள் மதிய உணவு வேளையின் போது ஒன்று சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


(21) காலையில் மாணவர்கள் வரும் பொழுதும் மாலையில் செல்லும் பொழுதும் இடைவேளையில் கழிப்பிடம் செல்லும் பொழுதும் வரிசையாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 


(22) மாணவர்கள் கை கழுவும் இடங்களில் சோப்பு வைத்திருக்க வேண்டும்.


(23) மதிய உணவுக் கூடங்கள் சுத்தமாக இருப்பதே உறுதி செய்ய வேண்டும்.


(24) பள்ளியில் மின் இணைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


(25) குப்பை தொட்டிகள் வகுப்பிற்கு ள்ளும் பள்ளி வளாகத்திலும் வைக்கப்படவேண்டும்.


(26) கட்டிடம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 


(27) மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


(28) குரானா தடுப்பூசி ஆசிரியர்களும் பணியாளர்களும் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை சேகரித்து வைக்கப்பட வேண்டும்.


(29) பள்ளியில் வாகனம் இருப்பின் வாகனத்திற்கு கிருமி நாசினி அடித்திருக்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் பணியாளர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.


(30) பள்ளியில் எல்கேஜி, யுகேஜி, ப்ரீ கேஜி மாணவர்கள் இருக்கக்கூடாது.


(31) மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் உடல் நிலை குறைவு பொறுத்து பெற்றோரை அழைக்க வேண்டும் அல்லது மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.


(32) பள்ளியில் தகவல் பலகையில் அவசரகால தொடர்பு எண்கள் எழுதி இருக்க வேண்டும். 

ஆரம்ப சுகாதார நிலைய தொலைபேசி எண்,

அரசு மருத்துவமனையின் தொலைபேசி எண், சுகாதார செவிலியரின் கைபேசி எண்,

சுகாதார மேற்பார்வையாளர் கைபேசி எண்,

RBSK நடமாடும் மருத்துவமனையின் எண்,

காவல் நிலைய எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

கொரானா-19 வழிகாட்டுதல்கள்

 கொரானா-19 வழிகாட்டுதல்கள்


கை சுத்தம் உயிர் பேணும்.


அடிக்கடி அழுந்தத் தேய்த்து கை கழுவுங்கள்.


முகக்கவசம் அணிவோம்; எச்சரிக்கையாக இருப்போம்.


முகக்கவசம், உயிர்க்கவசம்.


முகக்கவசம் கட்டாயம் அணியவும்.


சானிடைசரால் கைகளைச் சுத்தம் செய்யவும்.


கூட்டத்தைத் தவிர்க்கவும்.


பிறரைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவோம்.


சுத்தம் உயிர்க்காக்கும்.

Tuesday 26 October 2021

Eye Donation - கண்தானம்

விழிதானம் செய்வீர்!

இருவர் வாழ்வில் ஒளி ஏற்றுவீர்!

இறந்த பின்னும் உலகைக் காண விழிதானம் செய்வீர்!


கண் தானம் பற்றிய தகவல்கள்:

01. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.

02. மின்விசிறியை இயக்கக் கூடாது.

03. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

04. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
 
05. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
 
06. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

07. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

08. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
 
09. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.
 
10. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

11. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
 
12. விரைவாக தகவல் தெரிவித்து விழிதானம் முழுமை பெற உதவுவோம்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் – சமூக அறிவியல் – வினாத்தாள்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

சமூக அறிவியல் – வினாத்தாள்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் – கணக்கு – அடிப்படைகருத்துக்கள்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

கணக்கு – அடிப்படைகருத்துக்கள்