அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு:
அரசு வெளியிட்டுள்ள SOP ன் படி பள்ளிகளில் ஆயத்தப் பணிகளை செய்யவேண்டும்.
(01) பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பிடங்கள், மைதானம் ஆகியவை சுத்தப்படுத்துதல் வேண்டும்.
(02) குடிநீர் தொட்டி, மேல்நிலைத் தொட்டி சுத்தப்படுத்த வேண்டும்.
(03) சுத்தமான குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
(04) உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், சோப்பு போன்றவை இருக்க வேண்டும்.
(05) முக கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக போதுமான முக கவசம் இருப்பு இருக்க வேண்டும்.
(06) பெற்றோர்களிடம் விருப்ப கடிதம் பெறப்படவேண்டும். விருப்ப கடிதம் பெறப்படும் பொழுது மாணவர்களே முக கவசம் அணிவித்து அனுப்பும்படி கூறவேண்டும்.
(07) பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடித்திருக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி உதவிகளை கேட்டுக்கொள்ளலாம்.
(08) ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும் குறிப்பதற்கான பதிவேடு போடப்பட்டிருக்க வேண்டும்.
(09) வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக கால அட்டவணை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(10) குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பிரிண்ட் எடுத்து ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும்.
(11) காலையில் மாணவர்கள் வரும்பொழுதும், இடைவேளையின் போதும், மதிய உணவு வேளையின் போதும், மாலையில் மாணவர்கள் செல்லும் போதும் கவனிக்க வேண்டிய ஆசிரியர்கள் பெயர் விவரங்களை கிழமை வாரியாக பதிவேட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
(12) இருபதுக்கு இருபது 400 சதுர அடி கொண்ட ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். இது கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மேலும் அளவு குறைவாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் மாணவர்களை அமர வைக்க வேண்டும்.
(13) மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது சுழற்சி முறையில் மாணவர்கள் வருகையை முன்கூட்டியே உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் 1ம் தேதி அன்று வருகின்ற மாணவர்களை முன்கூட்டியே பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். எந்தவித காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் முதல் தேதியன்று பள்ளிக்கு வந்து விட்டு திரும்ப செல்லக்கூடாது. யார் வரவேண்டும் என்பதை முதலாவது உறுதிசெய்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
(14) SOP செயல்முறைகள் நகல் அனைத்து ஆசிரியர்களும் வைத்திருக்க வேண்டும்.
(15) மாணவர்கள் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
(16) பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள் வரும்பொழுது வரிசையில் இடைவெளி விட்டு நிற்பதற்கு வசதியாக வட்டம் போட வேண்டும். அதேபோன்று கைகழுவும் இடத்திலும் கழிப்பிடம் செல்லும் இடத்திலும் வகுப்பறைக்குள் நுழையும் பொழுதும் இடைவெளிவிட்டு மாணவர்கள் நிற்பதற்கு வசதியாக வட்டம் போட வேண்டும். முதலிரண்டு வகுப்புகளில் தேவைப்பட்டால் மாணவர்கள இடைவெளிவிட்டு அமர்வதற்கு வசதியாக வட்டம் போட்டுக் கொள்ளலாம்.
(17) மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து வரச் சொல்ல வேண்டும்.
(18) விலையில்லா பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.
(19) வகுப்பிற்கு ள்ளும் வகுப்பிற்கு வெளியையும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையிலே வாசகங்கள், பதாகைகள் ஒட்டப்பட்டி இருக்க வேண்டும்.
(20) மாணவர்கள் மதிய உணவு வேளையின் போது ஒன்று சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
(21) காலையில் மாணவர்கள் வரும் பொழுதும் மாலையில் செல்லும் பொழுதும் இடைவேளையில் கழிப்பிடம் செல்லும் பொழுதும் வரிசையாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
(22) மாணவர்கள் கை கழுவும் இடங்களில் சோப்பு வைத்திருக்க வேண்டும்.
(23) மதிய உணவுக் கூடங்கள் சுத்தமாக இருப்பதே உறுதி செய்ய வேண்டும்.
(24) பள்ளியில் மின் இணைப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
(25) குப்பை தொட்டிகள் வகுப்பிற்கு ள்ளும் பள்ளி வளாகத்திலும் வைக்கப்படவேண்டும்.
(26) கட்டிடம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
(27) மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
(28) குரானா தடுப்பூசி ஆசிரியர்களும் பணியாளர்களும் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ்களை சேகரித்து வைக்கப்பட வேண்டும்.
(29) பள்ளியில் வாகனம் இருப்பின் வாகனத்திற்கு கிருமி நாசினி அடித்திருக்க வேண்டும். ஓட்டுனர் மற்றும் பணியாளர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
(30) பள்ளியில் எல்கேஜி, யுகேஜி, ப்ரீ கேஜி மாணவர்கள் இருக்கக்கூடாது.
(31) மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டால் உடல் நிலை குறைவு பொறுத்து பெற்றோரை அழைக்க வேண்டும் அல்லது மருத்துவருக்கு தெரிவிக்க வேண்டும்.
(32) பள்ளியில் தகவல் பலகையில் அவசரகால தொடர்பு எண்கள் எழுதி இருக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய தொலைபேசி எண்,
அரசு மருத்துவமனையின் தொலைபேசி எண், சுகாதார செவிலியரின் கைபேசி எண்,
சுகாதார மேற்பார்வையாளர் கைபேசி எண்,
RBSK நடமாடும் மருத்துவமனையின் எண்,
காவல் நிலைய எண் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment